மாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அண்ணா நகரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் மாட்டுப் பொங்கல் பொங்கல் விழா நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ்பாண்டியன் என்ற அஜித் பாண்டி கலந்துகொண்டு அண்ணா நகரில் உள்ள மக்களுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடினார். அப்போது விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி உமாமகேஸ்வரியை பார்த்த ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது மாற்றுத்திறனாளி தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறினார். அதனை தொடர்ந்து இந்த சிறுமிக்கு மருத்துவ செலவு மற்றும் உணவு, படிப்பு உள்ளிட்ட முழு செலவுகளை அவரே ஏற்றுக் கொண்டதாக உறுதியளித்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டியின் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவராக அஜித் பாண்டி என்பவர் பதவியேற்று 10 நாட்களே ஆன நிலையில் மாற்றுத்திறனாளியின் செலவுகளை தானே ஏற்றுக் கொண்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று உதவி செய்த ஊராட்சி மன்ற தலைவர் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்வார் என அந்த பகுதி மக்களிடம் முழு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..