உசிலம்பட்டியில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் எம்ஜிஆரின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி எம்ஜிஆரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடாந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் நகர செயலாளர் பூமாராஜா,மாவட்ட கவுன்சிலா் சுதாகரன் துரை.தனராஜ் உக்கிரபாண்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகில் அமமுக சார்பில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டசெயலாளர் மகேந்திரன் தலைமையில் எம்ஜிஆரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர். இதில் நகரசெயலாளர் குணசேகரபாண்டியன் ஏகேடி ராஜா பிச்சைப்பாண்டி ஒன்றியக்கவுன்சிலா்கள் மலேசியா பாண்டி அலெக்ஸ்பாணடி வீரபிரபாகரன் பிரகதீஸ்வரன் மதன் காசி தகவல் தொழில்நுட்ப அணி மோகன்  மற்றும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image