எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம்,பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்103-வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள்முன்னேற்றக் கழகத்தின்சார்பில் கொண்டாடப்பட்டது .கழகத்தினர் எம் ஜி ஆர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு பெரியகுளம் நகர் கழக செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக அவைத் தலைவர் நல்ல வேலுச்சாமி முன்னிலை வகித்தார். பெரியகுளம் நகர் பகுதியில் கழகத்தினர் ஊர்வலமாக சென்று கழககொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.பெரியகுளம் நகர் கழக அவைத் தலைவர் செட்டியப்பன், பெரியகுளம் (கீழ வடகரை) ஒன்றிய கவுன்சிலர் மருதையம்மாள் சாஸ்தா உட்பட மாவட்ட, நகர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வழக்கறிஞர் அணியினர், பாசறை நிர்வாகிகள் உட்பட கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..