என்.ஆர்.சி.என்.பி.ஆர்.சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்.!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை செயல்படுத்துவது குறித்து, உள்துறை அமைச்சகம் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளை மேற்கொள்வது குறித்து உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மத்திய உள்துறைச் செயலர், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை, தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் மேற்கு வங்க அரசின் சார்பில் யாரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image