தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது.ஏ.பி,ஜெ இணைந்த கரங்கள் இளைஞர் மன்றம் சார்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞர்களிடம் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதியை தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கொத்திடல்-களக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.மேலும் கிராம தலைவர் கேசவன், மன்ற தலைவர் அஜித் மற்றும் ராமஜோதி,ராமநாதன்,தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..