உசிலம்பட்டியில் டாஸ்மாக் விடுமுறை தினத்தில் மது போதையால் விபத்து.3 போ் படுகாயம்.

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகே முன்டுவேலம்பட்டியைச் சேர்ந்த கர்ணன்மலை (25), மற்றும் மலைச்சாமி (27) ஆகிய இருவரும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில்; எதிரே வந்த மினி லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதே போல் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்த விஜயக்குமாரும் (22); இருசக்கரவாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விபத்து நிகழ்ந்துள்ளது. இவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் சிகிச்சையின் போது பரிசோதித்த போது 3இளைஞர்களும் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. டாஸ்மாக் விடுமுறை தினத்தில் இளைஞர்கள் மதுபோதைக்கு ஆளாகுவதிலிருந்து விடுமுறை நாளிலும் உசிலம்பட்டி பகுதியில் மதுவிற்பனை ஜோராக நடப்பது உறுதியாகியுள்ளது. இதில் முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் கர்ணன்மலை உயிருக்கு ஆபத்தான முறையில் மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image