உசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியில் தாத்தாவுடன் கண்மாயில் மாட்டை குளிப்பாட்டச் சென்ற சிறுமி கண்மாயில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் குடும்பத்துடன் மும்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது 2வது மகளான முத்துராக்கு (8) தனது தாத்தாவீட்டில் தங்கி அய்யன்கோவில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாட்டுப்பொங்கலுக்காக தனது தாத்தா மற்றும் முத்துராக்கு ஆகிய இருவரும் அருகே உள்ள பாறைப்பட்டி கண்மாயில் ஆடு, மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் போது சிறுமி முத்துராக்கு கண்மாயில் உள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய சிறுமியின் உடலை மீட்டனர். தகவலறிந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image