பாலக்கோடு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பாலக்கோடு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் அனைத்து போலீசாரும் வேட்டி சட்டை அணிந்து  புதுப்பாணையில் இனிப்பு பொங்கல் செய்யப்பட்டு செங்கரும்பு, மஞ்சள். காப்புக் கட்டுடன் காவல் நிலையம் முழுவதும் வண்ணக் கோலமிட்டு காவலர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என ஆரவாரத்துடன் முழக்கமிட்டு தைப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது 30க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்
பின்னர் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் செங்ககரும்பு வழங்கப்பட்டது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image