கீழை நியூஸ் செய்தியால் உடனடியாக மின்தடையை சீர்செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் அறிவிப்பில்லாத மின் தடையால் பொதுமக்கள் அவதி.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாடெங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் ஒரு பகுதி முழுவதும் முன்னறிப்பு இன்றி மின்சாரம் தடை பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் பொங்கல் பண்டிகையை முழு திருப்தியுடன் கொண்டாட முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தடை ஏற்பட்டுள்ள மின்சாரத்தை சீர்படுத்தி தந்து தமிழர் திருநாளை பொதுமக்கள் மனமகிழ்வுடன் கொண்டாடிட உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

மேற்கண்ட செய்தியை இன்று காலை சுமார் 10.30 மணியளவில் கீழை நியூஸ் சார்பாக வெளியிட்டு மின்வாரிய அதிகாரிகள் கவணத்திற்கு கொண்டு சென்றதின் பேரில் அதிகாரிகள் உடனடியாக கவணம் செலுத்தி போர்மேன் ஆனந்தன், வயர்மேன் ராமர் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் தாங்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை விடுத்து பொதுமக்கள் நலனே தங்கள் பனி என்பதை முன்வைத்து பழுதடைந்த நிலையில் இருந்த டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்தி உடனடியாக மாற்று டிரான்ஸ்பார்மர் வைத்து சுமார் 5 மணிநேரத்தில் மின்சாரம் வழங்கினர். மின்வாரிய ஊழியர்களின் துரிதமான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image