மதுரை லோக்கல் சேனலில் தர்பார் படம் ஒளிபரப்பிய விவகாரம்.சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் விளக்கம்.லைக்கா நிறுவனத்தின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள சரண்யா டிவி என்ற போக்கல் சேனலில் ரஜினியின் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பானது.இது தொடர்பாக சம்மந்தப்பட்ட லைகா பட நிறுவனம் சம்மந்தப்பட்ட லோக்கல் சேனல் உரிமையாளர் ஈச்சம்பட்டி ஜெயராமன் எனக்குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.இதுசம்மந்தமாக பிரபல தொலைக்காட்சிகளிலில் இவா் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியானது.இதை சம்மந்தப்பட்ட ஜெயராமன் மறுத்துள்ளாா். இந்நிலையில் சம்மந்தப்பட்ட லோக்கல் சேனல் உரிமையாளர்கள் தான் இல்லையென்றும் சிந்துபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக வெற்றி பெற்றததற்காக தான் மக்களுக்கு நன்றி சொல்லி சரண்யா டிவியில் விளம்பரம் ஓட்டியதாகவும் இதனை லைகா நிறுவனம் நான்தான் சேனல் உரிமையாளர் எனத் தவறுதலாக புரிந்து கொண்டு என் மீது புகார் அளித்துள்ளது.இது அனைத்து சேனல்களிலும் ரஜினியின் புகழை நான் கெடுப்பதாக செய்தி ஒளிபரப்பாகி உள்ளது.நேற்று நான் கிராமத்தில் பொங்கல் பரிசு வழங்கிக் கொண்டிருந்த நிலையில் நான் தலைமறைவானதாக என் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்தி வந்துள்ளது.இதனால் நானும் என் குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலில் உள்ளோம்.சம்மந்தப்பட்ட லைகா நிறுவனம் என் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதற்கு மன்னிப்பு கேட்டு மறுப்பு செய்தி வெளியிடாவிட்டால் லைகா நிறுவனத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் மேலும் தவறான செய்தி வெளியிட்ட சம்மந்தப்பட்ட தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்தாா்ஜெயராமன் சிந்துபட்டி ஊராட்சி மன்றத்தலைவராக அமமுக கட்சி சார்பில் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..