மண்டபம் ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம், இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும்அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கண் பார்வை திறன் பரிசோதனை நடந்தது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் கரையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வாணியன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம் நாரையூணி நடுநிலைப்பள்ளி, மெய்யம்புளி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச கண் கண்ணாடியை கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் வழங்கினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image