மண்டபத்தில் இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆர்.ராஜா ஆகியோரின் ‘ அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் திறப்பு விழா நடந்தது. மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் செ. மாலதி கூறுகையில், இங்கு வாலிபால் , கபடி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் செ. மாலதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எம்.ஏ. சீமான் மரைக்காயர், , மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு. முனியசாமி, மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எம். ரமேஷ், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் மா. மைதீன், மு. நம்புவேல் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply