மண்டபம் மீன்வளத்துறை ஆய்வாளரை பணியிட மாற்ற செய்ய ஆட்சியரிடம் புகார் மனு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வடக்கு, தெற்கு, கோயில்வாடி இடங்களில் உள்ள மீன்பிடி தங்குதளங்களில் 750க்கும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்படகுகளுக்கு மானிய டீசல், அனுமதி டோக்கன் , மீனவர் அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் கவனித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் இவர், பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் செய்வதும், வேண்டாதவர்களை காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் செயல்களை செய்து வருகிறார். விசைப்படகுகளுக்கான பெயர் மாற்றம், மீனவர் தேசிய சேமிப்பு நிவாரணம், மீன் பிடி தடை கால நிவாரணம், அரசு வழங்கும் அனைத்து நிவாரண முறைகேடு, தடைசெய்யப்பட்ட இரட்டை வலை மீன்பிடி ஊக்குவிப்பு, வெளியூர் படகுகள் விதிகளுக்கு புறம்பாக தங்குதளம் அமைக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். மண்டபத்தில் கடந்த 7 ஆண்டுகள் தொடர்ந்து பனியாற்றி வருவதால், அதிகார துஷ்பிரயோகம் வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம், மண்டபம் சம்மாட்டியப்பா தெரு எம்.முகமது அபுபக்கர் புகார் மனு கொடுத்துள்ளார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..