நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவிகள் சாதனை.!

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவிகள் சாதனை.!

திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் சார்பாக திருவருட்பா போட்டிகள்_21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு12.01 2020 அன்று ஸ்ரீவரதராஜா உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான, பல்வேறு திறன் போட்டிகள் நடைபெற்றது.இதில் 6_8 வகுப்புகளுக்கு நடைபெற்ற திருவருட்பா பேச்சுப்போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவி ரா.பிரியதர்சினி (ஆறாம் வகுப்பு) மூன்றாம் இடமும், 6_8 வகுப்புகளுக்கான திருவருட்பா ஒப்புவித்தல் போட்டியில் மு.லத்திகா என்ற ஆறாம் வகுப்பு மாணவி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

இம்மாணவிகளுக்கு பயிற்சி அளித்த திருமதி இராஜி,திருமதி லெட்சுமி ஆசிரியைகளையும்,இத்திறன் போட்டிக்கு அழைத்துச்சென்ற திருமதி இராஜி, மற்றும் திருமதி சாரதா ஆசிரியைகளையும், மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளையும், இப்பள்ளியின் தாளாளர் திரு ஜா.சுதாகரன்,தலைமை ஆசிரியர் திரு.விஜயகுமார் மற்றும் இருபால் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image