ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகரில் அமைந்துள்ள அவனியாபுரத்தில் நாளை (15.01.2020) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் நலன் கருதி காளைகள் நெரிசல் இன்றி அவனியாபுரத்திற்குள் செல்வதற்கு ஏதுவாக காளைகள் கூடுவதற்கு அவனியாபுரம் காவல் நிலையத்திலிருந்து முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் ரோடு சந்திப்பு வரை 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

.இதில் 1-ம் பிரிவிலிருந்து 8-ம் பிரிவுவரை 1 முதல் 400 வரை தலா 50 காளைகள் வீதமும் .9-ம் பிரிவிலிருந்து 11-ம் பிரிவுவரை 401 முதல் 700 வரை தலா 100 காளைகள் வீதமும் .கூடுவதற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூரிலிருந்து மதுரை மாநகருக்குள் வரும் காளைகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக முத்துப்பட்டி ரோடு சந்திப்புவரை வாகனத்தில் வந்து காளைகளை இறக்கி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவு எண்ணின் படி சம்பந்தப்பட்ட பிரிவில் காளைகளை நிறுத்திக்கொண்டு வாகனங்களை முத்துப்பட்டி சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் மற்றும் வெள்ளைக்கல் ஏரியாக்களிலும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..காளையின் உரிமையாளர்கள் மதுரை மாநகர காவல்துறையின் வேண்டுக்கோளுக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..