வீட்டில் புகுந்து 120 பவுன் திருடிய மூவர் கைது 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

மதுரை அப்பாதுரை நகர் முதல் தெரு, கூடல்புதுரைச் சேர்ந்த சோலை  மகன் குணசேகரன் என்பவர் சில நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு தனது வீட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறி பீரோவில் இருந்த 170 பவுன் தங்க நகைகளையும் மற்றும் பணம் ரூ.2,80,000/- -ம் எடுத்துகொண்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அவர்கள் பொலீரோ காரில் சென்றுவிட்டதாக D3 கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு  கார்த்திக் மேற்பார்வையிலும் கடும் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர்  அழகுமுத்து மற்றும் தலைமை காவலர்கள்  செல்வராஜ்,  தனசேகரன், ராமச்சந்திரன், பக்ருதீன், . ஜெயகௌசல்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் CCTV பதிவுகளை பார்வையிட்டு புலன் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புகார்தாரர் குணசேகரனின் மகனாகிய சோலைராஜா 36என்பது தெரிய வந்தது. மேலும் விசாரனை செய்ததில் மதுரை மாடக்குளம் பெரியார் நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மனைவி உமாதேவி 38 மற்றும் NGGO காலனி, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் ராஜராஜன் 42, என்பதும் தெரியவந்தது மேலும் மேற்படி குற்றசம்பவத்தில் ஈடுபட்டதை மூவரும் தனித்தனியே ஒப்புக்கொண்டனர். எனவே அவர்கள் மூவரையும் கூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல்  கைது செய்து அவரிடமிருந்து 120 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தார். மேலும் மூவரையும் நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி மதுரை மத்திய சிறையில் அடைத்தார். துரிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..