உசிலம்பட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வண்ண கோலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு மற்றும் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100 சதவீதம் வாக்கு பதிவு மற்றும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த கோலங்களை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் செளந்தர்யா பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து கோலங்களையும் கோலமிட்ட மாணவ மாணவிகளை கோட்டாட்சியர் செளந்தர்யா பாராட்டினார்.இதில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உட்பட மாணவ மாணவியா் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..