கண்டன பொதுக் கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் ” “தேசம் காப்போம் ” கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்திற்கு இந்திய உலமா பேரவை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். பாசிச எதிர்ப்புகூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் வரவேற்புரை வழங்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன் தொகுப்புரை வழங்கினார். பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆலிம் அகமது முஸ்தபா தீர்மானம் வாசித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் மா.செ. சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர், இரா.பெரியார் செல்வன், அ மாநில செயலாளர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர், இசுலாமிய நல கூட்டமைப்பு தலைவர் தண்டுப்பாளியம் நூர்சையது இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.தேனி மாவட்ட மற்றும் நகர ஜமாஅத் உலமா செயலாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..