ஆறு போல ஓடும் குடிநீர். கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பைபாஸ் ரோடு எல்லீஸ்நகர் பிரிவு சாலையில் (ஆப்பிள் ஸ்னாக்ஸ் நுழைவாயிலில் )பல மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் ஆங்காங்கே குடிநீருக்காக மறியலும் ஏற்படுகிறது. ஆனால் இங்கு பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாக சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில் பலமுறை அதிகாரிகள் இந்த வழியாகத்தான் செல்கிறார்கள். நாங்களும் புகார் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கண்டும் காணாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் கோடைகாலம் ஆரம்பித்தவுடன் நிலையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் குடிநீர் சேமிக்கும் அரசு குடி நீர் வீணாவதை தடுக்க மறுப்பது ஏன் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..