புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் இரண்டு நாள் பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டியில் நேரு நினைவு கல்லூரில் மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரியத்தை அனைவருக்கும் பறைசாற்றும் வகையில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர்.நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையணிந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.புலி ஆட்டம் , மாடு ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

வெள்ளிக்கிழமை சுயநிதி பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற சிறப்புவிருத்தினர் அரியலூர் அரசு கலை கல்லுரி முனைவர் தமிழ்மாறன் பேசுகையில் உலகமே மூன்று நாடுகளை பார்த்து அஞ்சுவதாக கூறினார். இந்தியா , சீனா மற்றும் ஜப்பான் நாடுகளை பார்த்து உலகம் அஞ்சுவதாக ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை நினைவு கூர்ந்தார். உலகிலே தமிழகம் ஒழுக்கம் மற்றும் வீரத்தில் தலை சிறந்து விளக்குவதற்கு ஜல்லிக்கட்டு ஒரு சிறந்த உதாரணம் என்றும் பேசினார்.சனிக்கிழமை அரசு உதவி பெறும் பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரைப்பட நகைசுவை நடிகர் கிங்காங் மற்றும் பென்ஜமின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செய்தி : இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..