பெரியபட்டினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் ஊராட்சி முத்தரையர் நகர் நியாயவிலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , பெரியப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சே.அக்பர் ஜான் பீவி வழங்கினார். வார்டு உறுப்பினர் செல்வராணி, கிராம பூசாரி காயாம்பு, பெரியபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் அஸ்கர் அலி, ரேஷன் கடை பொறுப்பாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image