நெல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி

நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா தெரிவித்தார்.நெல்லையில் நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, நெல்லையில் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள், எழுதுபவர்கள் , குறித்த புள்ளி விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்ட காவல் சோதனை சாவடிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சோதனை சாவடிகளில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.நெல்லையில் பொங்கல் விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ஜாதி மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், கடந்த வருடம் மோதல்கள் நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்,மேலும் பொங்கல் விடுமுறையில் நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image