மதுரை மாநகர் அரசு போக்குவரத்து கழக சாா்பாக ஆன்மீக சுற்றுலா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்  முருகேசன்  முயற்சியால் மதுரையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு. மதுரை மாநகருக்கு நாள்தோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மதுரை மாவட்டம் சார்பாக குறைந்த கட்டணத்தில் மதுரை எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் இருந்து காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மீண்டும் பிற்பகல் 2 மணியிலிருந்து 7 மணி வரையில் சுற்றுலா தளங்களை அறியும் வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் எல்லிஸ் நகர் பார்க்கிலிருந்து திருப்பரங்குன்றம் மாரியம்மன் தெப்பக்குளம் திருமலைநாயக்கர் மஹால் காந்தி மியூசியம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் சென்றுவர மீண்டும் எல்லிஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் வேலைக்கு விடப்படும். இதற்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு 125 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும். இந்த பேருந்து மதுரையில் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணத்தில் மேலாண் இயக்குனர்  இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்; இதனை குழுவாக இணைந்து சென்றும் பயணிக்கலாம் தனிநபர் ஆகும் பயணிக்கலாம் எனவும் இதனால் மதுரையில் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பெரிய வாய்ப்பினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது என மேலாண் இயக்குனர்  முருகேசன்  தெரிவித்துள்ளார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..