திண்டுக்கல் அருகே ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து ஆயுதப்படை காவலர் பலத்த காயம்

பழனியில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்த ஞான ஆரோக்கியம் (47).  இவர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இரயில் திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image