Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தல் – வெற்றி பெற்றவர்கள் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தல் – வெற்றி பெற்றவர்கள் விவரம்

by mohan

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் நான்கில் அதிமுக, 7 ல் திமுக வென்றது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. டிச.27, 30 தேதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி திருப்புல்லாணி ஒன்றியத்தில் அதிமுக 5 திமுக 5 சுயே 3 காங் 1, கமுதி ஒன்றியத்தில் அதிமுக 7 திமுக 7 சுயே 3 பாஜக 1 தேமுதிக 1, நயினார்கோவில் ஒன்றியத்தில் திமுக 4 அதிமுக 4 சுயே 1, முதுகுளத்தூர் ஒன்றியத்தில் சுயே 7 அதிமுக 4 திமுக 4, போகலூர் ஒன்றியத்தில் திமுக 5 சுயே 2 பாஜக 1, ராமநாதபுரம் ஒன்றியத்தில் திமுக 7 அதிமுக 3 காங் 1 தேமுதிக 1, திருவாடானை ஒன்றியத்தில் திமுக 10 காங் 4 அதிமுக 3 சுயே 3, கடலாடி ஒன்றியத்தில் அதிமுக 11 திமுக 10 சுயே 4, பரமக்குடி ஒன்றியத்தில் திமுக 7 அதிமுக 6, மண்டபம் ஒன்றியத்தில் திமுக 10 அதிமுக 4 சுயே 3 காங் 1 பாஜக 1 இந்திய கம்யூ 1 போட்டியின்றி தேர்வு 1, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் திமுக 8 சுயே 4 அதிமுக 2 என வெற்றி பெற்றனர்.

இன்று காலை நடந்த ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் வழக்கறிஞர் த.பிரபாகரன் (திமுக) – ராமநாதபுரம், சுப்பு லட்சுமி ஜீவானந்தம் (திமுக) – மண்டபம், சா.புல்லாணி (திமுக) – திருப்புல்லாணி, ராதிகா பிரபு (திமுக) – ஆர்.எஸ்.மங்கலம், ப. முகமது முக்தார் ( திமுக) – திருவாடானை, சிந்தாமணி முத்தையா (அதிமுக) – பரமக்குடி, வினிதா குப்புச்சாமி (அதிமுக) – நயினார்கோவில், சத்யா குணசேகரன் (திமுக) – போகலூர், முத்து லட்சுமி (அதிமுக) – கடலாடி, தர்மர் (அதிமுக) – முதுகுளத்தூர், தமிழ்செல்வி போஸ (திமுக) – கமுதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!