பாவை விழா போட்டிகள் – பரிசளிப்பு விழா

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாவை விழா போட்டிகள் நடைபெற்றது .ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரியின் தாளாளர் சேது குமணன் திருப்பாவை , திருவெம்பாவை பாடல்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார் .திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இளம் வயது மாணவர்கள் மனமாக ஒப்புவித்து பாராட்டுக்குரியது. 1 முதல் 8ம் வகுப்பு வரை திருப்பாவை ,திருவெம்பாவை போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. திருப்பாவையில் முதலிடம் பெற்ற சபரீஸ்வரன், கனிஷ்கா, முத்தையன் ,ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன் ,யோகேஸ்வரன், கீர்த்திகா ,ஆகியோருக்கும் ,திருவெம்பாவையில் முதலிடம் பெற்ற அட்சயா ,திவ்யஸ்ரீ, அம்மு ஸ்ரீ ,ஜனஸ்ரீ, சுரேகா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது .

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..