பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது

மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். அவர்களுடைய அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்வதற்காக, தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் மதுரை மாநகர காவல்துறை வாட்ஸ்அப் முறையீட்டு எண் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி B2-மீனாட்சி அம்மன் கோவில் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சங்கீதா அவர்கள் சித்திரை வீதிகளில் உள்ள 6 முக்கிய இடங்களில் இன்று (10.01.2020) பொருத்தினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..