மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.!

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய கலாச்சாரத் துறை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 4 காட்சிக் கூடங்களை புதுப்பித்து, புனரமைத்திருப்பதோடு, பழைய கலைக்கூடங்களை சீரமைத்திருப்பதுடன் புதிய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இன்றும் நாளையும் நடைபெறும் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், 2 நாள் பயணமாக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிக்கைக்கு சென்ற மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தார். மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது இருவரது முதல் சந்திப்பு ஆகும்.

முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நான் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன். இதனை ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளேன் என்றார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image