கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம்..

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (11.1.2020) காலை 11.00 மணி முதல் 3:40 மணிவரை பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம் கல்லூரி கலையரங்கக்கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த வகுப்பாசிரியருடன் பெற்றோர்கள் கலந்துரையாடல் செய்தனர். (Dietetics Day) உணவியல் தினத்தை முன்னிட்டு மனையியல் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல்புல முதன்மையர்கள், தேர்வாணையர், பல்துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image