வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு கலாம் இலட்சிய விருது!

இன்று (10/1/2020) இராமநாதபுரத்தில் அமைந்துள்ள தியாகி தர்மக்கன் அமிர்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாம் மாணவர்கள் இயக்கத்தினரால் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தில் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கர்லின் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் நோக்கவுரையாற்றிய கலாம் மாணவர்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் விஜயேந்திர ராஜா பேசுகையில் சாதாரண மனிதர்களின் திறமையை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்கும் வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு கலாம் இலட்சிய விருது வழங்குவதில் எங்கள் இயக்கம் பெருமையடைகிறது, இந்த இளம் வயதில் கலைவாணி தன் வாழ்நாட்களை உன்னதமான பணிகளுக்காக செலவுசெய்கிறார். ஒரு அமைப்பை நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இவர்போன்ற இளைஞர்களை உருவாக்குவதே கலாம் அவர்களின் இலட்சியம். இவரைப்போல பலர் எத்தனை தடைகள் வந்தாலும் மேற்கொண்ட பணியை நேசித்து செய்யவேண்டும் எனக்கூறினார்.

மேலும் Mind fresh Guidance & Counselling centre சார்பாக மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை கலைவாணி வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி முதல்வர் கர்லின் நன்றி கூறினார். இப்பரிசளிப்பு நிகழ்வு பொங்கல் விழா கொண்டாட்டத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image