சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடையும் வகையில் செய்தி வெளியிடும் நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு

செய்தி போடுவது மட்டும் நிறுத்திவிடாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதை சென்றடையும் வகையில் செய்தி வெளியிடும் நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு .கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ் )செய்தி எதிரொலியாக பள்ளி அருகே இரும்பிலான மின் கம்பத்தை மற்றும் தொங்கியபடி இருந்த மின் வயர்கள் மீட்டர் பாக்ஸ் களையும் சில மணி நேரத்திலேயே சரி செய்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16-ஆவது வார்டு எல்லிஸ் நகர் சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் இரும்பினாலான ஒரு மின் கம்பம் பழுதடைந்த நிலையில் மீட்டர் பாக்ஸ் உடைந்து வயர்கள் தொங்கியபடி இருந்தது. இது குறித்து நமது இணையதள செய்தியில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் செய்தி வெளியிட்ட சில மணி நேரத்திலேயே இரும்பினால் ஆன சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி காங்கிரட் மின் கம்பத்தை நிறுவினார்கள். மேலும் தொங்கியபடி இருந்த மின் வயர்கள் மற்றும் மீட்டர் வாக்குகளையும் சரிசெய்து மாணவ-மாணவிகள் உயிர்களை காத்துள்ளனர். மதுரை மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் மாணவ மாணவியர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த மாதிரி மாநகராட்சிக்கும் செய்தி வெளியிட்ட கிழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழுக்கு) அப்பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் நன்றிகளை தெரிவித்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image