குண்டர்களின் கூடாரமாக மாறிய திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்.

குண்டர்களின் கூடாரமாக மாறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட். அடிதடியில் இறங்கிய டோல்கேட்குண்டர்கள் காயமடைந்த ஐயப்ப பக்தர்கள். தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பிரதான டோல்கேட் ஆனது மதுரை கப்பலூர் டோல்கேட்டிலாக உள்ளது. இதில் திருநெல்வேலி கன்னியாகுமரி சிவகாசி செங்கோட்டை மற்றும் தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் இந்த டோல்கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த நிலையில் நேற்று 09.01.2020 மாலை 6 மணி அளவில் சென்னையை சேர்ந்த பாஸ்கர் மற்றும் குழுவினர்கள் ஐயப்பன் கோவிலில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு மதுரை வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கப்பலூர் சுங்கசாவடி வரும்பொழுது பாஸ்ட்ராக் வழியாக உள்ளே நுழைந்து விட்டார்கள். டோல்கேட் ஊழியர்கள் அது பாஸ்ட்ராக் வழி என்று சொல்லவே இரு மடங்கு கட்டணம் கேட்டுள்ளார்கள். இதற்கு ஐயப்ப பக்தர்கள் 15 ஆம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வருகிறது . நீங்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் எனவும் கேட்டுள்ளார்கள். அதற்கு ஊழியர்கள் ஐயப்ப பக்தர்களின் கழுத்தில் கையை வைத்து நான் இந்தியன் இல்லை பாகிஸ்தானை சேர்ந்தவன் என கூறியதாக தகவல் வெளியாகி மேலும் உருட்டுக்கட்டை இரும்பு கம்பிகளால் ஐயப்ப பக்தர்களை தாக்கியுள்ளார்கள். இதில் ஐயப்ப பக்தர்கள் சக்தி சாய். பாஸ்கர். குரு, குமரன் ஆகியோர் மண்டை உடைந்தது உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் மாலையையும் அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஐயப்ப பக்தர்கள் தாக்கிய 3 வடமாநில இளைஞர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக எந்த ஒரு டோல்கேட்டில் நடக்காத வன்முறை இந்த டோல்கேட்டில் மட்டும் அடிக்கடி நடக்கிறது. குண்டர்களை வைத்து டோல்கேட் வசூல் செய்வது கப்பலூர் டோல்கேட்டில் தொடர்கதையாகி வருகிறது. உதாரணத்திற்கு கடந்த 6 மாதங்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு மறியல் மற்றும் பல சம்பவங்கள் இந்த டோல்கேட்டில் தான் அடங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த டோல்கேட்டில் பணியாற்றும் ஊழியர்களை பற்றி தகவலை அறிய வேண்டும் எனவும் மேலும் பாகிஸ்தானை சேர்ந்தவர் யாரும் இதில் பணியாற்றுகிறார் எனவும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .மேலும் பொங்கல் விடுமுறை வருகின்ற காரணத்தினால் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனை பயன்படுத்தி பிரச்சினைகள் வரும் அதிக அளவு அனைத்து வாய்ப்புகள் உள்ளது என டோல்கேட் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image