புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் ஜனவரி 10ல் பொங்கல் விழா

பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள்.அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள்.இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். இந்திரனுக்கான விழாவாக இது கொண்டாடப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாக, இந்திரனின் கரும்பு வில்லை நினைவு கூரும் விதமாக கரும்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.உத்தராயண காலத்தின் தொடக்க நாட்களை போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என கொண்டாடுகிறார்கள் இப்போது. தற்போது காணும் பொங்கலும் கடைசி நாள் விழாவாக இணைந்துள்ளது.

போகி:

போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.போக்கி என்பதுதான் மருவி, போகி என்றாகி விட்டது. அதாவது பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படை இது. அசுத்தங்களைப் போக்கி சுத்தத்தை வரவேற்பது எனபது இந்தப் பண்டிகையின் தாத்பர்யம்.அசுத்தம் என்பது வீட்டில் மட்டுமல்லாது நமது மனதிலும் உள்ள அசுத்தங்களைப் போக்குவது, போகிப் பண்டிகை.

பொங்கல் பண்டிகை:

இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட தமிழகத்தில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம் தேதி) கொண்டாடப்படும். வீட்டில் சூரியன் ரதத்தில் வருவது போல் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

உழவர் திருநாள்- உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த சிறப்பு வாய்ந்த பொங்கல் விழா நேரு நினைவு கல்லூரில் ஜனவரி 10ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

செய்தி : இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..