உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவில் பத்திரிகையாளர்களுக்கு சாபமிட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை பச்சைக் கல் மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் இன்று 08.01.2020 காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூலவரான மரகத நடராஜர் முன், அமர்ந்து அபிஷேகம் காண முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. நடராஜர் தரிசனத்திற்காக பாரம்பரிய அர்ச்சகர்கள் கோயில் உள்ளே நுழைந்தபோது கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த அலுவலர்கள், அர்ச்சகர்களை உள்ளே வரக்கூடாது என இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலன் வாய்வழி உத்தரவிட்டதாக கூறினர். இதனையடுத்து அர்ச்சகர்களுக்கும் கோயில் அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரம்பரிய அர்ச்சகர்கள் வெளியேற்றத்தையடுத்து தங்களுக்கு அவமரியாதை ஏற்படுத்திவிட்டதாக அலுவலர்களிடம் அர்ச்சகர்கள் முறையீடு செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தனர். இச்சம்பவத்தால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மதிப்பளிக்காத இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலன் தன்னிச்சையான நடவடிக்கையால்மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அபிஷேகம் பார்க்க முடியாமல் போனது. கதவை மூடி கொண்டு அபிஷேகம் செய்வது என்பது இதுவே முதல்முறை. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டது என குருக்கள் குற்றம் சாட்டினர். இணை ஆணையர் தனபாலன் அவருடன் வந்தோர், வசதி படைத்தோரை உள்ளே அடைத்து கொண்டு அபிஷேகம் கண்டு தரிசித்தனர். அவர்கள் தங்களது செல்போன்களில் மூலவரை படம் பிடித்தனர். ஆனால், ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானம் வழங்கிய பாஸ் உடன் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி சானல் ஒளிப்பதிவாளர்கள், செய்தித்தாள் புகைப்பட காரர்களுக்கும் இணை ஆணையர் தனபாலன் அனுமதி மறுத்தார். இதனால், சந்தனம் படி களைந்த நடராஜரை படம் பிடிக்க இயலாமல் பத்திரிகையாளர்கள் தவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக படம் பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இணை ஆணையரின் தன்னிச்சையான முடிவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் வெளியேறினர். பத்திரிகையாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உச்சகட்ட கோபத்தில் மூலவரை படம் பிடித்து செய்தி வெளியிட்டால் அந்த பாவம் உங்களுக்கு தான் என பத்திரிகையாளர்கள் மீது தனபாலன் சாபமிட்டார். மேலும் வாக்குவாதம் தொடர்ந்ததால், பத்திரிகையாளர்களை திவான் பழனிவேல் பாண்டியன் சமாதானம் செய்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image