குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து சிறப்பு பிரார்த்தனை

மத்திய அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியது. இதனை வாபஸ் வாங்க கோரி பல இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து போராட்டங்கள் இன்னும் வீரியமடைந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் முகையதீன் ஆண்டவர் ஷாபி ஜும் ஆ பள்ளி வாசலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 400-க்கும் அதிகமானோர் நோன்பு வைத்து சிறப்பு தொழுகை,பிரார்த்தனை நடத்தினர். இதில் ஜமாத்தார்கள்,தலைவர் ஜமாலுதீன், செயலாளர் பீர்முகம்மது, பொறுப்பாளர் சாகுல் ஹமீது மஹ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..