சேடபட்டியில் திருத்திய வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினராக ஜெயலட்சுமி மற்றும் காளீஸ்வரி என்ற இருவர் போட்டியிட்ட நிலையில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது வேட்பாளர் ஜெயலட்சுமி பெயர் திருத்திய வாக்காளர் பதிவேட்டில் நீக்கம் செய்யப்பட்டிருந்தையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஜெயலெட்சுமி முறையிட்டதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாக்களித்த நிலையில் இந்த குளறுபடி காரணமாக வாக்கு எண்ணிக்கை இந்த வார்டில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 08.01.2020 மதுரை மாவட்டம் ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இந்த வார்டில் பதிவான 188 வாக்குகளை மறுவாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.இதில் ஜெயலட்சுமி 133 வாக்குகளும், காளிஸ்வரி 51 வாக்குகளும் பெற்ற நிலையில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜெயலட்சுமியிடம் வழங்கினார்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image