குலசேகரக்கால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் சீமைகருவேலமரத்தால் பாதிப்பு

இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராம கண்மய்கள் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய் நிரம்பியும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் தண்ணீரில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இது குறித்து மக்கள் பாதை பொறுப்பாளர் தினேஷ் கூறியதாவது. சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் குலசேகரக்கால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு சென்றதால் இக் கண்மாய்கள் நிரம்பிவிட்டன.

ஆனால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் மக்கள் குளிக்க பயன்படுத்த முடிய வில்லை. குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது. தண்ணீரின் நிறம் மாறி கருப்பாக காட்சியளிக்கிறது.மழைக்கு முன்பு சீமைகருவேல மரங்களை அகற்றியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் .ஆனால் அதிகரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது .இது குறித்து அதிகாாிகள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தால் இனி வரும் காலங்களிலாவது மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.மேலும் நிலத்தடி நீா் மட்டமும் உயரும் எனக் கூறினாா்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image