இராமநாதபுரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மாவட்ட கவுன்சிலருக்கு திமுக கட்சியினர் வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் 17 வது வார்டில் திமுக., சார்பில் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி போட்டியிட்டார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தாண்டியை விட 11,584 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முத்தாண்டி : 8,495 ரவிச்சந்திர ராமவன்னி : 20,079. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ரவிச்சந்திர ராமவன்னியை மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் மு.நம்புராஜன், நிர்வாகிகள் பூசாரி கருப்பையா, ரா.ஆறுமுகம், பெ.பாண்டியன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். 4வது முறையாக வெற்றி பெற்ற ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, ஏற்கனவே ஒரு முறை மாவட்ட ஊராட்சி தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..