Home செய்திகள் திருப்புல்லாணியில் மூலிகை கண்காட்சி

திருப்புல்லாணியில் மூலிகை கண்காட்சி

by mohan

தேசிய சித்த மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.சித்தமருத்துவ தினத்தை முன்னிட்டு மத்திய சித்த ஆராய்ச்சி குழும அறிவுரை படி, ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வழிகாட்டுதலில், பனைக்குளம் அரசு மருத்துவமனை, திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மூலிகை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கூ.செல்வராஜ் தலைமை வகித்தார். உத்தரகோசமங்கை சித்த மருத்துவ அலுவலர் க.முத்துராமன் வரவேற்றார்.

மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் கோ.புகழேந்தி கண்காட்சியை திறந்துவைத்தார். இளந்தளிர் விழிப்புணர்வு பிரசுரத்தை மாணவர்களிடம் வழங்கினார்.கருத்தரங்கில் சித்தமருத்துவம் தோன்றிய வரலாறு, சித்தர்கள் எழுதிய மருத்துவ நூல்கள், இந்திய மருத்துவமுறைகள் பற்றி பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் பேசினார். நம் மாவட்டத்தில் காணப்படும் அரிய வகை மூலிகைகள் பற்றி தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு ஒளி ஒலிக்காட்சி மூலம் விளக்கினார்.சித்த மருத்துவம் பற்றி மாணவர்களுக்குதேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது பாசில் முதலிடம், ஜெ.சுஜிதாஸ்ரீ இரண்டாமிடம், அபிநயாஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!