ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.!

ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குததல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உட்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று ஜே.என்.யு. பல்கலைக்கழகத்திற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார். கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை தாக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவில்லை என்றும் இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கனிமொழியிடம் மாணவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக கனிமொழி அவர்களிடம் உறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மோசமாக தாக்கப்பட்டிருப்பதையும் கனிமொழி நேரில் சென்று பார்த்தார். எந்த நேரத்திலும், எவ்வித உதவிக்காகவும் தம்மைத் தொடர்புகொள்ளும்படி அவர் காஷ்மீர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image