கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில்கள் வழங்கும் நிகழ்வு..

????????????????????????????????????
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள்  சார்பாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ருபாய் 1 லட்சம் மதிப்புடைய 20 இரும்பு கட்டில்கள் நன்கொடையாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.குமரகுருபரன் முன்னிலையில்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்டில்களை பெற்றுக்கொண்ட துணை இயக்குனர் கூறுகையில், “இந்த கட்டில்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்து அளிக்கப்படும் என்றார். இதனால் நிறைய ஏழை மக்கள், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பயன்பெறுவர். இதுபோன்ற சேவை மனப்பான்மை நாட்டில் அதிகரிக்க வேண்டும்“ என்று வேண்டிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து   இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராகிம் பேசும்போது, “ஏழை மக்கள் நலனுக்காக தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாக கூறினார். கீழக்கரை அரசு மருத்துவமனை தொலைவில் இருப்பதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அங்கு செல்வதற்கு சிரமமாக உள்ளது என்றும் ஊரின் மையப்பகுதியில் அனைவருக்கும் பயன்படும் வகையில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மருத்துவ துணை ஆணையர் ஊருக்குள் இடம் அளிக்கும் பட்சத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   தெற்குத்தெரு ஜமாத்தின் நிர்வாகி  நிஸ்பர், அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க முன்வரும் பட்சத்தில் அரசுக்கு மருத்துவமனை செயல்பட ஜமாஅத் சார்பாக இடம் வழங்க ஜமாத் தலைவரிடம் பேசி ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில்  வட்டார  மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி,   கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு திரு.பூபதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகம்மது,  மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image