நடிகர் வடிவேலுவால் பல கோடி நஷ்டம்: இயக்குனர் சதீஷ்குமார் பரபரப்பு புகார்.!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து எலி திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சதீஸ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த்திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சனை ஆகி பாதியில் நிற்கிறது.

என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் சென்று தகராறு செய்துள்ளார்.

மொத்தம் 14 கோடி ரூபய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார். ஆனால் அதை செய்யவில்லை.

சம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன்..நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறியுள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார்.

நடிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன்.

அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன்.

தற்போது நடிகர் வலுவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர் என்று கூறினார்..

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..