உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பூட்டிகிடக்கும் பெண்கள் இலவச கழிப்பறை. கட்டணம் செலுத்தி செல்லும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தினமும் 1000க்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி சார்பில் பெண்களுக்கு இலவச கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டன. ஆனால் சில வருடத்திலேயே பாமரிப்பு இல்லாமல் போனதால் பூட்டி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இலவச கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றி செயல்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருவதால் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நகராட்சி நிர்வாகமே பொதுமக்களுக்கு எதிராக செயல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்து நகராட்சி ஆணையாளர்  மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  இலவச கழிப்பறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..