மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

மதுரை திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூர் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சக்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் நிலக்கோட்டை சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.திருமணம் முடிந்ததும் இவர் ராணுவத்தில் பணியாற்ற சென்று விட்டார். இந்நிலையில் தேனிஷாவுக்கும் ராணுவ வீரர் சக்தியின் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.அதில் தேனீஷா உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு சக்தி விடுமுறை சொந்த ஊருக்கு வந்த நிலையில் தேனிஷா தற்கொலை செய்து கொண்டார்.இது சம்பந்தமாக இரு தரப்பினரையும்  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஓ விசாரணைக்காக வந்திருந்தனர்.மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சக்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள உயர் மின்னழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் வயரை பிடித்தார்.பிடித்த உடனே தூக்கி வீசப்பட்ட சக்தி மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..