உசிலம்பட்டி – செல்லம்பட்டி ஊராட்சியில் பதவியேற்ற சுயேட்சை கவுன்சிலரை திமுகவினர் காரில் கடத்தியதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் பதவியேற்கும் விழா நடைபெற்றது.மொத்தம் 16 ஒன்றியக்கவுன்சிலர்கள் பதவியேற்ற நிலையில் அதிமுக கூட்டணியில் 9 பேரும் திமுக சார்பில் 6 பேரும் சுயேட்சையாக கோவிலாங்குளம் ஒன்றியக்கவுன்சிலராக (8வது வார்டு) அரவிந்த் என்பவரும் பதவியேற்றனர்.

இந்நிலையில் அரவிந்த்தை திமுகவினர் கடத்தப்போவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்த அரவிந்த் காம்பவுண்டு சுவர் ஏறி தப்பமுயன்றார். ஆனால் தப்பியோடிய அரவிந்தை மடக்கிபிடித்து திமுகவினர் காரில் கடத்திச்சென்றுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.கடைசி நேர குதிரை பேரத்தில் திமுகவினா் ஈடுபட இருப்பதாகவும் அதனால் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக சுயேட்சை கவுன்சிலரைக் கடத்தியதாகவும் நம்பத்தக்க வட்டாரங்கள் தொிவித்தன.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image