உசிலம்பட்டியில் திமுகவினர் அதிமுகவினரிடையே மோதல் .போலிசார் தடியடி ..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் பதவியேற்கும் விழா நடைபெற்றது.மொத்தமுள்ள 13 கவுன்சிலர்களில் திமுகவில் 5 பேரும் அதிமுகவில் 5 பேரும் அமமுகவில் 2 பேரும் சுயேட்சையாக 1 நபரும் பதவியேற்றுக் கொண்டனர்.பதவியேற்றதும் திமுகவினர் அமமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மலேசியா பாண்டி –அலெக்ஸ் பாண்டி(11வதுவார்டு வகுரணி-12வது வார்டு ஜோதில்நாயக்கனூர்) ஆகிய இருவரையும் காரில் அழைத்துச் சென்றனர்.கவுன்சிலர்களை கடத்துவதாக அதிமுகவினர் திமுக காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இரு தரப்பினருக்குமிடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..