தொருவளூர், வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர்கள் பதவியேற்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 429 ஊராட்சி தலைவர்கள், 3,075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஒன்றிய கவுன்சிலர்கள், 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு டிச., 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் இன்று காலை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். ராமநாதபுரம் ஒன்றியம் தொருவளூர் ஊராட்சி மன்றத் தலைவராக எஸ்.பஜூருதீன், மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி மன்றத் தலைவராக ஜெ.செய்யது அல்லா பிச்சை மற்றும் வார்டு உறுப்பினர்கள் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image