முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வெற்றியை நோக்கி” சிறப்பு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று (06/01/2020) காலை 11.00 மணியளவில்  நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M. முகம்மது யூசுப், செயலாளர் S.M.H.சர்மிளா, இயக்குனர் P.R.L.S.ஹமீது இப்ராஹிம்  இந்நிகழ்வை வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்றும், மாணவிகளை ஊக்கப்படுத்தியும் கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இராமநாதபுர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் Dr.A.புகழேந்தி மாணவர்கள் மதிப்பெண்னைக் காட்டிலும் மதிக்க கூடிய பெண்களாகவும், பெற்றோர்களுக்கு நற்பெயர் வாங்கி தரக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும் என்று தலைமை உரையாற்றினார். கல்லூரி நிறுவாகத்தின் சிறப்பையும், கல்லூரி சிறப்பம்சங்களையும் தமிழ் துறைத் தலைவர் Dr.H.பாத்திமா எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.K.செந்தில் குமார், கணினி ஆசிரியர், அலங்கனூர் மாணவிகளை ஊக்கப்படுத்தி ‘முதல்வனாக இரு, அல்லது முதல்வனோடு இரு’ என்றும், உலகத்தில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை தனித்துவம் பெற்றவர்கள் என்று சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து SRM இயக்குனர் M.ஹாஜா அஜ்மீருதீன் மாணவிகள் எந்த படிப்பை தேர்ந்து எடுத்தால் எந்த வேலைக்கு செல்லலாம் என வேலைவாய்ப்பு தகவலை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகள் அனைவருக்கும் கல்லூரியின் சார்பாக ILLUSTRATED FAMILY ENCYCLOPEDIA புத்தகமும், 350 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை கல்லூரி IQAC குழுவும் அனைத்து பேராசிரியர்களும் இணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image