டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி – கருத்துக் கணிப்பில் தகவல்.!

டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி – கருத்துக் கணிப்பில் தகவல்.!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

டெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குப்பதிவும், 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 3 இடங்களில் வென்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி, டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி 62, பாஜக 4 இடங்களுடன் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image