வேலூர் கோட்டைக்குள் அத்துமீறும் காதல் ஜோடிகள் – ஆபாச செய்கையால் முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்.!

 வேலூர் கோட்டைக்குள் அத்துமீறும் காதல் ஜோடிகள் – ஆபாச செய்கையால் முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்.!

பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான வேலூர் கோட்டையில் பல்வேறு பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

பள்ளிக் குழந்தைகள், வெளிநாட்டினர் என கோட்டையை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்.

அங்குள்ள ராஜகோபுரங்கள், ஜலகண்டேஸ்வரர் கோயில், திப்பு மகால், ஹைதர் மகால், மசூதி, ஜான் தேவாலயம் ஆகியவை பயணிகளை ஈர்த்துள்ளன.

ஆனால், மதில் சுவர் இடுக்கு, மறைவான இடங்கள் என, காதல் ஜோடிகள், ஆபாச செயல்களில் ஈடுபடுவதால், பெரும் சிரமம் ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவ மாணவிகள், சிறார்கள் சுற்றிப் பார்க்க தகாத இடமாக மாறிவிட்டதாக கூறும் பயணிகள், ஆபாச செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

கோட்டையின் அகழி பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியருடன் சென்ற அதிகாரிகளும் முகம் சுழித்தவாறு சென்றனர்.

ஏற்கனவே பலமுறை கூறிய நிலையில், மீண்டும் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டு அத்துமீறும் ஆபாச ஜோடிகள் மீது, போலீசார் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image